\
முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரிடம் தீவிர விசாரணை

முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரிடம் தீவிர விசாரணை

முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரிடம் தீவிர விசாரணை
Published on: 

தமிழக முதல்வர் பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சுந்தர்ராஜ் என்பவரை பிடித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இன்று காலை சென்னை காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் விரைந்தனர். முதலமைச்சர் வீட்டிற்கு மோப்பநாயுடன் வந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை வீடு முழுவதும் சோதனை நடத்தினர். 

சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதலமைச்சர் இல்லத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் சுந்தர்ராஜ் என்பதை கண்டுபிடித்த போலீசார், அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com