\
அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
Published on: 

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்தி மொழியில் பேசிய நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தியாகராய நகரை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com