தொடர்ச்சியாக அழுத ஒன்றரை வயது குழந்தை.. பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது..!

தொடர்ச்சியாக அழுத ஒன்றரை வயது குழந்தை.. பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது..!

தொடர்ச்சியாக அழுத ஒன்றரை வயது குழந்தை.. பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது..!
Published on

சென்னை தாம்பரம் அருகே ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கூலித் தொழிலாளியின் மகளான ஒன்றரை வயது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் அக்குழந்தை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோர் தரப்பில் தாம்பரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ‌

காவல்துறை நடத்திய விசாரணையில் ரமேஷ் என்பவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு குழந்தையை கவனித்துக் கொள்வதாகக் கூறி குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷ் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com