காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பின்னடைவு

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பின்னடைவு
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பின்னடைவு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, குல்பர்கா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாஜக 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, கர்நாடக மாநிலம் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் டாக்டர் உமேஷ் ஜி. ஜாதவ் போட்டியிட்டார். இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பின் தங்கியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com