ஈரோடு: விடுதி முன்பு ஆதரவில்லாமல் விடப்பட்ட 3 நாட்களே ஆன குழந்தை..!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் நாகர்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள ஒரு
விடுதி முன்பு ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது.
உடனடியாக இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் பிறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் குழந்தையின் எடை 1700 கிராம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து தகவலறிந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்