தேக்கடியில் சுற்றுலா பயணிகளை கவரும் மலபார் அணில்கள்

தேக்கடியில் சுற்றுலா பயணிகளை கவரும் மலபார் அணில்கள்

தேக்கடியில் சுற்றுலா பயணிகளை கவரும் மலபார் அணில்கள்
Published on

கேரள மாநிலம் குமுளியில் உள்ள தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியில் காணப்படும் மலபார் அணில்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள தேக்கு மரங்களில் தற்போது பழங்கள் அதிகளவு காணப்படுகிறது. வனத்திற்குள் உள்ள மலபார் அணில் எனப்படும் பெரிய வகை அணில்கள் தினமும் இந்த தேக்கம்பழங்களை உண்டு பசியாற்றுகின்றன. இப்பழங்களை வழக்கமாக மலபார் அணில்கள் உண்ணாது என்றாலும் பசியால் அவற்றை உண்டு பழக்கப்பட்டுவிட்டதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். தேக்கம்பழங்களை உண்ணும் மலபார் அணில்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com