\
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு

ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு

ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
Published on

மக்கள் நீதி மய்யம்- சமத்துவ மக்கள் கட்சி- ஐஜேகே கூட்டணி உறுதியாகியுள்ளது என சரத்குமார் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார் “மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியாகியுள்ளது. கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர். மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். கொள்கை ரீதியாக ஒன்று சேர்கிறோம். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு இப்போது வழங்குவது ஏன்? மக்களுக்காக சிந்திக்க வேண்டும். ஓட்டுக்காக சிந்திக்க கூடாது. சமத்துவம் இல்லையென்றால் நாடு வீணாய் போகும்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com