\
''மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமை'' - கமல் ட்வீட்

''மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமை'' - கமல் ட்வீட்

''மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமை'' - கமல் ட்வீட்
Published on

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், ''மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com