‘மயிலாப்பூர் நீதி மய்யம்’ - கமல்ஹாசன் கட்சியை விமர்சித்த முரசொலி

‘மயிலாப்பூர் நீதி மய்யம்’ - கமல்ஹாசன் கட்சியை விமர்சித்த முரசொலி
‘மயிலாப்பூர் நீதி மய்யம்’ - கமல்ஹாசன் கட்சியை விமர்சித்த முரசொலி

கமல்ஹாசனின் கட்சி மக்கள் நீதி மய்யம் அல்ல மயிலாப்பூர் நீதி மய்யம் என அக்கட்சியிலிருந்து வெளியே சென்றவரே விமர்சித்ததாக முரொசொலி நாளேடு விமர்சித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சென்னை தொகுதியில் நடிகர் நாசரின் மனைவி கமீலா போட்டியிடுகிறார். அத்துடன் அக்கட்சியின் அதிக வேட்பாளர்கள் தொழிலதிபர்கள் தான். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது. 

அதில், “‘டேக் ஆப்’ ஆவதற்கு முன்பே ‘டயர்’கள் எல்லாம் கழன்றோடத் தொடங்கி விட்டன. அமைப்பாளர் விலகல், பொருளாளர் ராஜினாமா என தினம் தினம் செய்திகள் வரத் தொடங்கிய நிலையில், இருக்கும் சிலரை தக்க வைக்க அரைகுறை அறிவிப்பு, ஒன்றை அவசரமாக அக்கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ளார். அந்த கட்சியிலிருந்து விலகிய வழக்கறிஞர் ராஜசேகர், அது மக்கள் நீதி மய்யமல்ல; மயிலாப்பூர் நீதி மய்யம் ஆகிவிட்டது எனக்கூறியுள்ளார். மயிலாப்பூர் நீதி மய்யத்தின் ஆலோசகர்களின் பட்டியலிட்டாரே பார்க்கவில்லையா? ‘மயிலாப்பூர் நீதி மய்யம்’ பாஜகவுக்கு எதிராக செயல்படுமா அல்லது அதன் ‘பி’ டீமாக விளங்குமா என முடிவெடுத்துக்கொள்ளுங்கள்” என விமர்சித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com