பாஜகவில் இணைகிறார் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச் செயலாளர்

பாஜகவில் இணைகிறார் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச் செயலாளர்

பாஜகவில் இணைகிறார் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச் செயலாளர்
Published on

 மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் முழுதாக இருந்த போதும், தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிரடியாக தமிழகம் முழுவதும் தன்னுடைய சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். கமல்ஹாசன் பரப்புரைக்கு பின்னர் தான் சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது எனலாம்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார். தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அருணாச்சலம். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியது முதலே அக்கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார் அருணாச்சலம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com