புத்துணர்வு முகாமில் யானையை சரமாரியாக தாக்கும் பாகன்கள் - வைரல் வீடியோ

புத்துணர்வு முகாமில் யானையை சரமாரியாக தாக்கும் பாகன்கள் - வைரல் வீடியோ
புத்துணர்வு முகாமில் யானையை சரமாரியாக தாக்கும் பாகன்கள் - வைரல் வீடியோ

கோவையில் நடத்தப்பட்டு வரும் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் பாகன்கள் யானையை கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில், கோயில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் கடந்த 8 ஆம்தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமல்யதாவை பாகன்கள் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தக் காட்சியில் இரு பாகன்களும் யானையை கடுமையாக தாக்குகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான யானை வலி தாங்க முடியாமல் பிளிறுகிறது.

பாகன் பேச்சை யானை கேட்காததால் என்பதால் யானை தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேசிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com