\
மனைவியை புதைத்த கொடூரன்: ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்

மனைவியை புதைத்த கொடூரன்: ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்

மனைவியை புதைத்த கொடூரன்: ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்
Published on

மனைவியை கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கிய பகுதியில் வசிப்பவர் கணேசன். இவர் மனைவி வெண்ணிலா. கணேசன் கோவையில் உள்ள தனியார் செங்கல் சூலையில் பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய பெண்ணுடன் கணேசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் கனவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி அந்தப் பெண்ணுடன் வீட்டுக்கு வந்த கணேசன், வெண்ணிலாவை அடித்துக்கொன்றார். பின் அவர்கள் குடியிருந்த வீட்டிற்குள்ளேயே புதைத்தார். இதற்கு அவருடன் இருந்த பெண்ணும் உதவி செய்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணை, திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜியாவுதீன் கணேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அவருக்கு உறுதுணையாக இருந்து குற்றத்தை மறைத்ததற்காக அந்தப் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com