“300 பேருக்கு 50 உணவு பொட்டலங்கள்... ” - வேதனையில் மாமல்லபுரம் மீனவ மக்கள்

“300 பேருக்கு 50 உணவு பொட்டலங்கள்... ” - வேதனையில் மாமல்லபுரம் மீனவ மக்கள்

“300 பேருக்கு 50 உணவு பொட்டலங்கள்... ” - வேதனையில் மாமல்லபுரம் மீனவ மக்கள்
Published on

நிவர் புயல் எதிரொலியாக மாமல்லபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அங்கிருக்கும் மீனவ கிராம மக்கள் அங்காங்கே இருக்கும் சமூக நலக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிவர் புயல் வங்கங்கடலில் புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாமல்லபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அங்கிருக்கும் மீனவ கிராம மக்கள் அங்காங்கே இருக்கும் சமூக நலக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை எவ்வித உதவியும் அரசு செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகள் அனைத்து உதவியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாலும் 300 பேர் இருக்கும் இடங்களில் 50 உணவு பொட்டலங்களே கொடுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com