தமிழ்நாடு
முடிவு என்ன?: மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் புது தகவல்
முடிவு என்ன?: மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் புது தகவல்
சசிகலா அணியில் இருக்கும் அமைச்சர் பாண்டியராஜன், தனது ட்விட்டர் பதிவில் வாக்காளர்களின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள விரிசலால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு தரப்பினரும், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் மற்றொரு தரப்பினரும் என அதிமுக இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இதுநாள் வரை சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமைச்சர் மஃபா பாண்டியராஜன் திடீரென்று வாக்காளர்கள் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், வாக்காளர்களின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளித்து ஜெயலலிதாவின் கொள்கைகள் மற்றும் கட்சியை வலுப்படுத்தும் விதமாக முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.