ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அமைச்சர்கள் அனைவரும் சசிகலா தலைமையை ஆதரித்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திட்டமிட்டுள்ளார். ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் முதல் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆவார். முன்னதாக, வாக்காளர்களின் ஒட்டு மொத்த குரலுக்கு மதிப்பளித்து ஜெயலலிதாவின் கொள்கைகள் மற்றும் கட்சியை வலுப்படுத்தும் விதமாக முடிவெடுப்பேன் என்று ட்விட்டரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.