தமிழை ஆட்சி மொழியாக மாற்றுவது அமித்ஷாவின் கையில் தான் உள்ளது - மாஃபா பாண்டியராஜன்

தமிழை ஆட்சி மொழியாக மாற்றுவது அமித்ஷாவின் கையில் தான் உள்ளது - மாஃபா பாண்டியராஜன்

தமிழை ஆட்சி மொழியாக மாற்றுவது அமித்ஷாவின் கையில் தான் உள்ளது - மாஃபா பாண்டியராஜன்

தமிழை ஆட்சி மொழியாக மாற்றுவது அமித்ஷாவின் கையில் தான் உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரில் அதிமுக செய்யூர் தொகுதி வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் “பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்வதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடு. சட்டமன்றத்தில் இதுகுறித்து ஜெயலலிதா தீர்மானமே நிறைவேற்றியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஆளுநருக்கு கடிதம் எழுதியும் உள்ளார். விடுதலை குறித்து ஆளுநர்தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

அமித்ஷா முக்கிய திட்டங்களை துவக்கி வைக்கிறார். குறிப்பாக மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், ஜப்பான் நிறுவனம் மூன்றும் இணைந்து செயல்படுத்தக் கூடியது மெட்ரோ ரயில் சேவை. அதற்கு அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல தேர்வாய் கண்டிகை இரண்டு ஏரிகளை இணைத்து ஒரு மிகப் பெரிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது அதையும் திறந்து வைக்கிறார். மற்றும் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அவருடைய வரவு வித்திடும் என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் வளர்ச்சித்துறையை பொருத்தவரை, தமிழ் ஆட்சி மொழியாக மாற்றுவது அவருடைய கையில் இருக்கின்றது. அவர் மத்திய உள்துறை அமைச்சர். அவர் அந்த கோரிக்கையை கண்டிப்பாக செவிமடுத்து அதற்கு துணையாக இருப்பார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com