\
களத்தில் முதல் எதிரி திமுகதான்: மாஃபா பாண்டியராஜன்

களத்தில் முதல் எதிரி திமுகதான்: மாஃபா பாண்டியராஜன்

களத்தில் முதல் எதிரி திமுகதான்: மாஃபா பாண்டியராஜன்
Published on: 

ஆர்.கே.நகர் களத்தில் முதல் எதிரி திமுக-தான் என அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், குடும்ப அரசியலை எதிர்த்து ஒவ்வொரு முறையும் பன்னீர்செல்வம் பேசுகிறார். குடும்ப அரசியல் என்பது சசிகலா, டிடிவி தினகரன் மட்டுமல்ல. திமுக-வும் தான் என்றார். ஒட்டுமொத்த ஊழலின் உருவம் திமுக என குறிப்பிட்ட அவர் குடும்ப அரசியலின் ஊற்றுகண்ணாக இருக்கும் திமுகவை எப்போதும் எதிர்ப்போம் என்றார். ஆர்.கே.நகர் களத்தில் முதல் எதிரி திமுக தான் எனவும் அவர் கூறினார்.

ஜெயலலிதா சிந்தனையில் உதித்த, கொருக்குப்பேட்டை பாலத்தை எப்படியெல்லாம் தடுக்கலாம் என பல்வேறு முயற்சிகளை திமுக மேற்கொண்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பணிமனை நாளை காலை திறக்கப்படும் எனவும் அதன்பின் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனவும் பாண்டியராஜன் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com