தமிழ்நாடு
கூவத்தூர் சென்ற மாஃபா பாண்டியராஜன் தடுத்து நிறுத்தம்
கூவத்தூர் சென்ற மாஃபா பாண்டியராஜன் தடுத்து நிறுத்தம்
கூவத்தூர் செல்லும் வழியில், கோவளத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் நட்சத்திர விடுதிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் புறப்பட்டுச் சென்றார். அப்போது கூவத்தூர் செல்லும் வழியில் கோவளத்தில் மாஃபா பாண்டியராஜனை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

