தமிழ்நாடு
நீட்டை கொண்டுவந்தது தி.மு.க, காங்கிரஸ் : மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு
நீட்டை கொண்டுவந்தது தி.மு.க, காங்கிரஸ் : மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு
நீட் தேர்வு முறையை கொண்டு வந்ததே தி.மு.கவும், காங்கிரஸும் தான் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர இயலாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவிற்கு ஆழ்ந்த இரங்கலை டிவிட்டரில் தெரிவித்த பாண்டியராஜன், நீட் தேர்வை ஏற்பதாக அதிமுக அரசு கையெழுத்திட்டது என வெளியான செய்திகளில் சிறிதும் உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நீட் தேர்வை கடந்த 2010ஆம் ஆண்டு தி.மு.கவும், காங்கிரஸும் தான் கொண்டு வந்தன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக அந்த கட்சியினர் வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும் என்றும் மாஃபா பாண்டியராஜன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.