\
maduranthakam dharapuram by election polling starts
மதுராந்தகம்புதிய தலைமுறை

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தொடங்கியது!

இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்படுகிறது.
Published on: 
Summary

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தொகுதிமுழுவதும் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் என சுமார் 4,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொகுதியில் 1,06,875 ஆண் வாக்காளர்களும் 1,15,523 பெண் வாக்காளர்களும் மற்றும் 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,22,406 வாக்காளர்கள் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பானுமதி, திமுக வேட்பாளர் சுகன்யா, தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தாராபுரம்
தாராபுரம்புதிய தலைமுறை

மதுராந்தகம் தொகுதியில், மொத்தம் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 1,04,926 ஆண் வாக்காளர்களும் 1,08,797 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 2,13,788 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். அதிமுக வேட்பாளர் கணித சம்பத், திமுக வேட்பாளர்- பரந்தாமன், தவெக வேட்பாளர்- மரகதம் குமரவேல், நாம் தமிழர் கட்சி- வேட்பாளர் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்- சுகந்தி உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இரு தொகுதிகளிலும் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com