தமிழ்நாடு
ரத்தம் வடிந்த புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மதுரை இளைஞர்
ரத்தம் வடிந்த புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மதுரை இளைஞர்
மதுரை அருகே இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்து கொள்வதாக முகநூலில் பதிவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அகில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். தனது பெற்றோர்கள் கோவிலுக்கு சென்ற நிலையில், தான் தற்கொலை செய்யப்போவதாக நண்பர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன், கையில் ரத்தம் வடியும் புகைப்படத்தையும் முகநூலில் பதிந்துள்ளார். இதை கண்ட அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு துறையினர் மயங்கி கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.