"எனது சகோதரனை என்கவுண்டர் செய்ய காவல் துறையினர் திட்டம்" - மதுரையில் இளம்பெண் பகிரங்க குற்றச்சாட்டு

குற்ற வழக்கில் தொடர்புடைய தனது சகோதரனை என்கவுண்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
press meet
press meetpt desk

மதுரையைச் சேர்ந்தவர் வெள்ளகாளி என்ற காளிமுத்து (36). தற்போது ஒரு குற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், காவல்துறையினர் போலி என்கவுண்டர் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், சென்ற வாரம் சிறையில் செல்போன் பயன்படுத்துவதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி காளிமுத்துவிற்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

encounter
encounterpt desk

இந்நிலையில், அடிக்கடி காளிமுத்துவை வெளி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும், சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது தப்ப முயன்றதாகவும், வேறு வழியில்லாமல் காவல்துறையினர் என்கவுண்டர் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. காளிமுத்துவின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் முழுக்க முழுக்க காவல்துறையும், சிறை காவல்துறையுமே முழு பொறுப்பு என குற்ற வழக்கில் தொடர்புடைய காளிமுத்துவின் சகோதரி திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் காளிமுத்துவின் தாய் ஜெயக்கொடி புகார் கடிதத்தை தமிழக முதலமைச்சர், சிறைத்துறை அமைச்சர், உள்துறை செயலாளர் என பலருக்கும் அவசரகால மனுவாக அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com