மதுரை மரக்கடையில் தீ விபத்து: ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!

மதுரை மரக்கடையில் தீ விபத்து: ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!
மதுரை மரக்கடையில் தீ விபத்து: ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!

மதுரை தேனி மெயின் ரோட்டில் உள்ள தனியார் மரக்கடைத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

மதுரை எஸ் எஸ் காலனியைச் சேர்ந்த சேதுராமன் என்பவருக்கு சொந்தமான மரத்திலாலான பர்னிச்சர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை நகர்  வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 35 பேர் மூன்று வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  

சுமார் மூன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான மர பர்னிச்சர் பொருட்கள் தீயில் கருகி சேதமானது. இச் சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என்பதி முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com