மதுரை: மதுபானக் கடையை அகற்றக் கோரி 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

மதுரை: மதுபானக் கடையை அகற்றக் கோரி 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
மதுரை: மதுபானக் கடையை அகற்றக் கோரி 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

மேலூர் அருகே மதுபானக் கடையை அகற்றக் கோரி இரண்டாவது நாளாக பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாணிபட்டி கிராமத்தில் நேற்று மதுபனக் கடையை அகற்றக் கோரி 3 மணி நேரமாக பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக இங்குள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்து அதிகாரிகள் அனுப்பி வைத்த நிலையில், நேற்று மாலையை மதுபானக் கடையை திறந்ததால் இன்று மீண்டும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேலூர் - நத்தம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 1 மணி நேரமாக கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பெண்கள் போராட்டத்தில் ஈருபட்டு வருவதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com