மதுரை: பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான். எல்.முருகன்

மதுரை: பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான். எல்.முருகன்

மதுரை: பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான். எல்.முருகன்
Published on

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான். ராகுல்போன இடமே தோல்வி என்ற நிலைதான் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டியளித்தார்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்...

சென்னை வந்த பிரதமருக்கு அதிமுக - பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள். வரும் 25-ஆம் தேதி கோவைக்கு பிரதமர் வருகை தருகிறார். 21ஆம் தேதி சேலத்திற்கு ராஜ்நாத்சிங் வருகை தருகிறார். பாஜகவின் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். இந்தத் தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தேர்தலை பாஜகவிற்கு முக்கிய தேர்தலாக நினைத்து பணிபுரிகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட வெற்றிபெறும். அதிமுக - பாஜக உறுதி செய்யப்பட்ட கூட்டண. இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அமர்ந்திருப்பார்கள்.

ஸ்டாலினால் எப்போதும் ஆட்சி அமைக்க முடியாது. திமுக தேசிய வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்பதால் பொதுமக்கள் வாக்களிக்கமாட்டார்கள். ஸ்டாலினின் கனவு கனவாகவே மாறிவிடும் என்பதே உண்மை. திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஏன் குறைதீர்கூட்டம் நடத்தவில்லை. இப்போது குறைதீர்கூட்டம் நடத்துவது என்பது அரசியலுக்கானது தேர்தலுக்கானது. புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து திமுக நவீன தீண்டாமையை கையில் எடுத்துள்ளது.


சமையல் எரிவாயு விலை, பெட்ரோல் விலை குறையும். பிரதமர் மோடி கையை தூக்கி பிடித்த அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகம் வந்த ராகுல்காந்தி ஸ்டாலின் குறித்து எங்கும் பேசவில்லை. ராகுல் செல்லும் இடமெல்லாம் தோல்விதான் ஏற்படுகிறது. தலைசிறந்த ஆட்சியை தந்த அம்மாவிற்கு புகழஞ்சலி செலுத்துவதில் தவறில்லை. திமுக கூட்டணி உடையும் நிலை உள்ளதால் அதிமுக கூட்டணியிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

வேளாண் சட்டத்தை எந்த விவசாயிகளும் எதிர்க்கவில்லை, விவசாயிகள் பிரதமர் மோடியை தோழனாக பார்க்கின்றனர். GoBackModi என்று கூறுவது கடுமையான கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே வருகைதரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் அநாகரிகம். அதனை தாண்டி WelcomeModi என்ற நிலை உருவாகியுள்ளது. மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திமுகவினரும், தேசவிரோதிகளும்தான் பின்னணியில் உள்ளனர்.

பிரதமர் மோடி - எடப்பாடி சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது. நாரயணசாமி செயல்பாடு பிடிக்காமல் புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்கின்றனர். சசிகலா தனது நிலைப்பாட்டை அறிவித்த பின் தங்களது கருத்தை கூறுவோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com