மதுரையில் நூற்றாண்டுகளை கடந்த ஆலமரம் : விழா எடுத்த சமூக ஆர்வலர்கள்

மதுரையில் நூற்றாண்டுகளை கடந்த ஆலமரம் : விழா எடுத்த சமூக ஆர்வலர்கள்

மதுரையில் நூற்றாண்டுகளை கடந்த ஆலமரம் : விழா எடுத்த சமூக ஆர்வலர்கள்
Published on

மதுரையில் நூற்றாண்டுகள் கண்ட ஆலமரத்திற்கு சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ‘நூற்றாண்டு விழா’ கொண்டாடினர்.

மதுரை செல்லூரை அடுத்த மீனாம்பாள்புரம் கண்மாய் கரையோரம் உள்ள ஆலமரத்திற்கு மதுரையிலுள்ள சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நூற்றாண்டு விழா கொண்டாடி உள்ளனர்.

மரத்திற்கு நூற்றாண்டு விழா எடுத்தது குறித்து சமூக ஆர்வலர்களிடம் கேட்டதற்கு, மதுரையில் குறுங்காடுகள் அமைத்து சுற்றுசூழலை பாதுகாக்கவும், அதன் மூலம் பறவை உள்ளிட்ட பல்லுயிர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர். பொதுமக்களிடம் மரங்களின் நன்மைகள் குறித்த முழுமையான புரிதல் இல்லாத காரணத்தால், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலமரத்திற்கு நூற்றாண்டு விழா எடுப்பதாக தெரிவித்தனர்.

சாலை விரிவாக்கத்தை காரணம் காட்டி இந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மதுரை மாநகராட்சி அகற்றியது வரவேற்கதக்கது என்றாலும், அதன் அடுத்த கட்டமாக இங்குள்ள பழமை வாய்ந்த நூற்றாண்டு கடந்த ஆலமரத்தை வெட்டிவிட கூடாது என்பதற்காக, மக்களிடம் மரத்தினால் என்னென்ன பயன்கள் என்பதை எடுத்துரைத்து வருவதாக கூறுகின்றனர். நம் முன்னோர்கள், நாம் மற்றும் நம் எதிர்கால தலைமுறையினருக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே விழா எடுத்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துக்கொண்டனர். மேலும், ஆலமரத்தினால் மனிதர்களுக்கு மட்டும் நன்மை இல்லை நீர்நிலைகளுக்கும், சுற்றுசூழலுக்கும் நன்மை என எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com