”கழகங்கள் இனி..” - மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

”கழகங்கள் இனி கதறும் உன்னைப் பற்றி... திலகங்கள் உனக்கு இட இனிமேல் வெற்றி” என்ற வாசகங்களுடன் மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
poster
posterpt desk

செய்தியாளர்: சுபாஸ்

விஜய் மக்கள் இயக்கம் மூலம் நலத்திட்டங்களை செய்து வந்த நடிகர் விஜய், அரசியலுக்கு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சித் தொடங்கியுள்ளார். அதனை அதை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

vijay makkal iyakkam
vijay makkal iyakkamfile

இந்நிலையில், தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும், கட்சியின் கொடி, சின்னம் ஆகியவை அறிவிக்கப்படும் என்றும் விஜய் தரப்பில் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் அனைத்து கட்சிகளின் கொடி வண்ணங்களில் "கழகங்கள் இனி கதறும் உன்னைப் பற்றி, திலகங்கள் உனக்கு இட இனிமேல் வெற்றி" 2026 நாளைய தீர்ப்பு என சட்டமன்றம் அடங்கிய புகைப்படத்துடன் பல்வேறு பகுதிகளில் கட்சியினர் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com