\
மதுரை: ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்பக்கம் தொங்கியபடி பயணம் - வைரலாகும் வீடியோ

மதுரை: ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்பக்கம் தொங்கியபடி பயணம் - வைரலாகும் வீடியோ

மதுரை: ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்பக்கம் தொங்கியபடி பயணம் - வைரலாகும் வீடியோ
Published on

மேலூரில் ஆபத்தை உணராமல் தனியார் பேருந்தின் பின்பக்கம் படியில் தொங்கியபடி பயணம் செய்த நபரின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

மதுரையில் இருந்து சிங்கம்புணரி மார்க்கமாக தனியார் பேருந்து சென்று வருகிறது. இந்தநிலையில், இன்று காலை சிங்கம்புணரியில் இருந்து மேலூர் வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு மதுரைக்கு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.

மேலூர் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது ஆபத்தை உணராமல் பயணி ஒருவர் பின்பக்க கம்பியில் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் யாரை குறை சொல்வது என தெரியாமல், இதனை பார்த்த வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com