விபத்து
விபத்துபுதியதலைமுறை

திருமங்கலம் | லாரி மோதி தூய்மைப்பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு; டிரைவர் தலைமறைவு

திருமங்கலத்திலிருந்து விமானநிலையம் செல்லும் சாலையில் தேவர் சிலை அருகே இருசக்கர வாகனம் வந்த சமயம், பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் மோதியுள்ளது.
Published on

மதுரை திருமங்கலம் அருகே லாரி மோதி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இருவர் பலியான சோகம்.

மதுரையை அடுத்த திருமங்கலத்தில் லட்சுமி மற்றும், நாகரத்தினம் என்ற இருபெண்கள் அங்கிருக்கும் நகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், லட்சுமி மற்றும் நாகரத்தினம் இருவருக்கும் நன்கு அறிமுகமான நபர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில், இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

திருமங்கலத்திலிருந்து விமானநிலையம் செல்லும் சாலையில் தேவர் சிலை அருகே இருசக்கர வாகனம் வந்த சமயம், பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இரு பெண்கள் மீதும் பின்னால் வந்த லாரி ஏறி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இரு பெண்களும் உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரும், இருசக்கரவாகன ஓட்டுநரும் உடனடியாக அந்த இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com