\
மதுரை: வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகளுக்கு நேர்ந்த சோக முடிவு

மதுரை: வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகளுக்கு நேர்ந்த சோக முடிவு

மதுரை: வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகளுக்கு நேர்ந்த சோக முடிவு
Published on

மதுரை வைகை ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள மறவர் 2வது தெரு பகுதியை சேர்ந்த  முருகன் - முத்து தம்பதியினருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்த பெண் குழந்தைகளான சுஜி மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் காணவில்லை என பெற்றோர்கள் கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தேடிவந்தனர். இந்நிலையில் இரு சிறுமிகளின் உடல் ஆரப்பாளையம் மற்றும் எல்.ஐ.சி பாலம் அருகே சடலமாக மிதந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் இரு உடலையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கரிமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com