\
மதுரை: தொண்டனை தள்ளிவிட்ட அமைச்சர் - வைரலாகும் வீடியோ

மதுரை: தொண்டனை தள்ளிவிட்ட அமைச்சர் - வைரலாகும் வீடியோ

மதுரை: தொண்டனை தள்ளிவிட்ட அமைச்சர் - வைரலாகும் வீடியோ
Published on

மதுரை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக தொண்டர் ஒருவரை பிடித்து தள்ளியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெகுதிவாரியாக சென்று பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கிவருகிறார்.

இந்நிலையில், இன்று காலை முதல் திருமங்கலம் அருகே உள்ள கண்டுகுளம், சாத்தாங்குடி, மேல உரப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், சாத்தங்குடி கிராமத்தில் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கினார். அப்போது அதிகமான மக்கள் கூடியதால் அனைவருக்கும் முகக் கவசத்தை வழங்கிவிட்டு வந்த அமைச்சரை பார்க்க வந்த ஒரு தொண்டரை அமைச்சர் பிடித்து தள்ளி விட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமைச்சர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து கட்சித் தொண்டரிடம் கடுமையாக நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com