திரையரங்கம் முன்பு நிறுத்தியிருந்த கார் - திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திரையரங்கம் முன்பு நிறுத்தியிருந்த கார் - திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திரையரங்கம் முன்பு நிறுத்தியிருந்த கார் - திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

மதுரையில் திரையரங்கம் முன்பு நிறுத்தி வைகப்பட்ட விலையுயர்ந்த கார் தீடீரென தீப்பிடித்த எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்து கீழவாசல் நோக்கிச் செல்லும் சாலையில் சந்தைப்பேட்டை பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள சிக்னலுக்கு அருகே பிரபல திரையரங்கம் ஒன்று உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் பணி நிமித்தமாக மதுரை வந்த நிலையில், திரையங்ரகம் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உணவகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்த நிலையில், தீ பரவத் தொடங்கியுள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் அருகில் இருந்த போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த மேல அனுப்பானடி தீயணைப்புத் துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். தகவல் தெரிவித்த உடனயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

திரையரங்கம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் தீடீரென தீ பிடித்த எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com