மதுரை: பழைய இரும்புக் குடோனில் பயங்கர தீ விபத்து... பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

மதுரை: பழைய இரும்புக் குடோனில் பயங்கர தீ விபத்து... பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

மதுரை: பழைய இரும்புக் குடோனில் பயங்கர தீ விபத்து... பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Published on

மதுரையில் பழைய இரும்புக் பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

மதுரை கோமதிபுரம் அல்லி வீதி பகுதியை சேர்ந்தவர் சன்னாசி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் பழைய பொருட்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென குடோனில் இருந்து புகை வருவதாக அக்கம்பக்கத்தினர் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர், அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


இருப்பினும் தீ வேகமாக பரவியதால் தல்லாகுளம், அனுப்பானடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com