\
எருதுகட்டு நிகழ்ச்சியில் காவல்துறையினர் 12 பேர் காயம்

எருதுகட்டு நிகழ்ச்சியில் காவல்துறையினர் 12 பேர் காயம்

எருதுகட்டு நிகழ்ச்சியில் காவல்துறையினர் 12 பேர் காயம்
Published on

வாடிப்பட்டி அருகே நடைபெற்ற எருது கட்டு நிகழ்ச்சியில், எருதுகள் முட்டியதில் காவல்துறையினர் 12 பேர் காயமடைந்துள்ளனர். 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆதி அய்யனார் கோவிலின் ஆடி மாத உற்சவ விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நடைபெற்ற எருது கட்டு நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த 36 காளைகள் கலந்து கொண்டன. அப்போது சீறிப்பாய்ந்த எருதுகள் முட்டியதில் காவல்துறையினர் 12 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போட்டிக்களம் சற்று பரபரப்புடன் காணப்பட்டது. பின்னர் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com