\
நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி கைது
நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி கைதுinstagram

தனிஷ்க் கொள்ளை| கைதான மீனாட்சிக்கு அதிகரித்த 50K Followers.. தவறான முன்னுதாரணமாகும் Social Media!

சிறைக்குச் சென்ற பிறகும் மீனாட்சியின் பிரபலத்துக்கு காரணம் என்ன?
Published on: 
Summary

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் follower எண்ணிக்கை சிறைக்குச் சென்ற பிறகு வினோதமாக அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இது தவறான முன்னுதாரணமாக விவாதிக்கப்படுகிறது.

செய்தியாளர் - M.மீரா

மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் ₹15 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் நள்ளிரவில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இக்கொள்ளை தொடர்பாக, தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி என்று சொல்லப்பட்ட நிஷாந்த், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யூடியூபர் மீனாட்சி கைது
யூடியூபர் மீனாட்சி கைதுinstagram

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மீனாட்சியின் (Meenakshi Nachiyar) followers எண்ணிக்கை, அவர் சிறைக்குச் சென்ற பிறகு வினோதமான முறையில் பல ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மீனாட்சி கைது செய்யப்படுவதற்கு முன்பு வரை இன்ஸ்டாகிராமில் சுமார் 1.52 லட்சம் (152K) ஃபாலோயர்ஸ் மட்டுமே இருந்தனர். கைதான அடுத்த சில தினங்களிலேயே, அவரது அக்கவுண்ட்டை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து 2.07 லட்சத்தைத் (2.07 Lakhs) தாண்டியுள்ளது.

ஒரு குற்ற வழக்கில் கைதான பெண்ணை எதிர்மறையான விமர்சனங்களுக்காகத் தேடிப் பார்த்த நெட்டிசன்கள், ஆர்வக்கோளாறால் அவரைப் பின்தொடரத் (Follow) தொடங்கியதே இந்த திடீர் உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

நகைக்கொள்ளை வழக்கில் கைதான மீனாட்சி, நகைகள் திருடப்பட்டதும், அது ஒளித்துவைக்கப்பட்ட இடம் அனைத்தும் தெரிந்தபிறகும் அதை போலீஸாரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். மேலும் வசதியான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகவே இந்தக்குற்றச்செயல் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் நபர்கள் பின்தொடரும் ஒரு நபர் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கவேண்டுமே தவிர, குற்றச்செயல்களில் ஈடுபட்டு மோசமான உதாரணமாக மாறக்கூடாது. இந்தச்சூழலில் ஒரு குற்றவாளியை பின்தொடரும் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சோஷியல் மீடியா எந்தளவு மோசமான சமூகச்சூழலை மாற்றியிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி கைது
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: தேடப்பட்டுவந்த குற்றவாளி நிஷாந்த் கைது.. பிடிபட்டது எப்படி?