பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில் இணைந்தார்!

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில் இணைந்தார்!

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில் இணைந்தார்!
Published on

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன் தனது குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்துள்ளார்.

மதுரை அண்ணாநகர் நெல்லை வீதியில் வசித்து வருபவர் மோகன். இவர் மேலமடை அருகே சலூன்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கின்போது கஷ்டப்படும் மக்களுக்காக, தனது மகளின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தை பொதுமக்களுக்கு கொடுத்து உதவியதற்காக பலரது பாராட்டுக்களைப் பெற்றார். 

இதனையடுத்து முடி திருத்தத் தொழிலாளியின் இந்த மனிதநேயத்தை பிரதமர் மோடி கடந்த மே 31-ஆம் தேதி ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசியிருந்தார்.

இந்த நிலையில் மேகன், அவரது மனைவி பாண்டீஸ்வரி, அவருடைய நண்பர்கள், உறவினர்கள் என 300க்கும் மேற்பட்டோர், மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com