மதுரை: ஹோட்டலை அடித்து நாசம் செய்து அட்டூழியம்; கையில் ஆயுதங்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட ரவுடிகள்!

தமிழகத்தில் இரண்டாவது பெரிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஒரு கும்பல் கையில் பட்டக்கத்தியுடன் வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார்கள்.
ஹோட்டலில் அடாவடி செய்த கும்பல்
ஹோட்டலில் அடாவடி செய்த கும்பல்புதிய தலைமுறை

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 7 பேர் அடங்கிய ஒரு கும்பல், ஹோட்டலில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அந்த காட்சிகளைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் இரண்டாவது பெரிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஒரு கும்பல் கையில் பட்டக்கத்தியுடன் வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார்கள்.

மக்களை மிரட்டியும், கையிலுள்ள ஆயுதங்களை காட்டியும் மிரட்டியதை அடுத்து மக்கள் அக்கும்பல் குறித்து போலிசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதனிடையே நேற்று மாலை அந்த கும்பல் இவ்வோட்டலில் வந்து தண்ணீர் கேட்டுள்ளனர். ஹோட்டல் ஊழியர்கள் தண்ணீர் தராத காரணத்தால், அவர்கள் ஊழியர்களை மிரட்டி ஹோட்டலை அடித்து நாசம் செய்துள்ளனர்.

இதனை அடுத்து ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலிசார் ஏழுபேர் மீதும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com