தமிழ்நாடு
மதுரையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை; வெள்ளக்காடான மாநகரம்
மதுரையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை; வெள்ளக்காடான மாநகரம்
அக்னி நட்சத்திரம் நேற்று பகலில் முடிவடைந்த நிலையில் மதுரையில் பலத்த காற்றுடன் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
மழை காரணமாக மாநகர் முழுவதும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்தது. மதுரை மாநகர் பகுதிகளான கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார், மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையினால் சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.