மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் பணியின் போது காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரியின் குழந்தைகள் நலத்துறையில் ஆராய்ச்சி பட்டம் படித்து வரும் வருண் என்பவர், ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அவர், பணியில் இருந்த போதே திடீரென அங்கிருந்து மாயமாகியுள்ளார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மதிச்சியம் காவல்துறையினர், விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், புத்துணர்வு தேவைப்படுவதால் ஓய்வு தேவை என காணாமல் போன மருத்துவர் வருண் கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.