மதுரை: நூதன திருட்டில் ஈடுபடும் டவுசர் கொள்யைர்களை பிடிக்க உருட்டுக் கட்டைகளுடன் சுற்றிய பொதுமக்கள்

மதுரை புறநகர் பகுதியில், டவுசர் கொள்ளை கும்பலைத்தேடி பொதுமக்கள் விடிய விடிய உருட்டுக் கட்டைகளுடன் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதும்பு, சங்கையா நகர் உள்ளிட்ட இடங்களில் அண்மைக் காலமாக நள்ளிரவில் ஒருகும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டு உடல் முழுவதும் எண்ணெயை தேய்த்துக் கொண்டு டவுசருடன் வரும் கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் செல்கின்றனர்.

thieves
thievespt desk

இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரவு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அப்போது பொதுமக்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பியோடிய நிலையில், எப்படியாவது கொள்ளையர்களை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக பொதுமக்கள், விடிய விடிய உருட்டுக் கட்டைகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இது குறித்து மதுரை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் கேட்டபோது... கொள்ளையர்களைp பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com