அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேருpt desk

மதுரை: மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய பொதுமக்கள்

மதுரையில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவிடம் பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரையில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேருpt desk

தண்ணீர் அதிகம் சூழ்ந்த கட்டபொம்மன் நகர், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த நிலையில், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தண்ணீர் புகுந்தது குறித்து அமைச்சர் நேருவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பெண்களும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அமைச்சர் கே.என்.நேரு
தவெக மாநாட்டு திடல்: அலை அலையாய் குவிந்து வரும் தொண்டர்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com