மதுரை: சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
prisoner
prisonerpt desk

மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிப்பட்டி பகுதி விவசாய வயலில் தண்ணீர் மோட்டாரை திருடிய வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பால்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உசிலம்பட்டி கிளைச்சிறையில் கடந்த 19 ஆம் தேதி அடைக்கப்பட்டார்.

madurai GH
madurai GH pt desk

இந்நிலையில், சில நாட்களாகவே உடல் சோர்வாக காணப்பட்ட பால்பாண்டிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உசிலம்பட்டி காவல்துறையினர் அவரை முதலில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பால்பாண்டி இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பியோடி உள்ளார். இதனைத் தொடர்ந்து தப்பியோடிய கைதி பால்பாண்டியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com