சிறந்த காவல் நிலயமான மதுரைக்கு முதல் பரிசுபுதியதலைமுறை
தமிழ்நாடு
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கோப்பை... யாருக்கு கிடைத்தது?
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்ஷாவுக்கு, மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது.
76வது குடியரசு விழாவில் வீரதீர செயல்களைப் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் என்று பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்ஷாவுக்கு, மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கோப்பையை மதுரை மாநகர காவல் நிலையம் பெற்றது. இரண்டாவது பரிசு திருப்பூருக்கும், மூன்றாவது பரிசு திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.