அரசு மருத்துவமனையில் தகராறு: ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்குப்பதிவு

அரசு மருத்துவமனையில் தகராறு: ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்குப்பதிவு

அரசு மருத்துவமனையில் தகராறு: ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்குப்பதிவு
Published on

மதுரை அருகே சோழவந்தானில் அரசு மருத்துவமனையில் புகுந்து தகராறில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

 மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி பகுதி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஆலயமணி. இவர் சோழவந்தான் மருத்துவமனையில் தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவம் பார்க்க வந்துள்ளார். அப்போது மருத்துவர் பணியில் இல்லாமல் இரு செவிலியர்கள் மட்டும் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆலய மணி, மருத்துவரை செல்போனில் அவதூறாக பேசியதாகவும் பின்னர் மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் சந்திரமோகனை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் மீது மருத்துவர் புகார் அளித்தார். மருத்துவமனை மீது வன்முறை நிகழ்த்துதல், 2008 சட்டப்படி அவதூறு பேசி கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான ஆலயமணியை தேடி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com