உடல் உறுப்பு தானத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் குடும்பம்

உடல் உறுப்பு தானத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் குடும்பம்
உடல் உறுப்பு தானத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் குடும்பம்

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 45பேர் கண், உடல் உறுப்பு தானங்களை செய்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளனர்.

தமிழகம் உடல் உறுப்புகள் தானம் வழங்குவதில் முன்னனியில் இருக்கிறது. உடல் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்ய தமிழக அரசு பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது . மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை இதற்கான விழிப்புணர்வை பெயர் அளவில் மட்டும் செய்யாமல், தானம் செய்ய வருபவர்களை அன்புடன் வரவேற்று அவர்களுக்கான உதவிகளை செய்து , தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அதிகளவு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்கின்றது.

ஒரு தனி மனிதரை உறுப்பு தானம் செய்ய மருத்துவதுறையைச் சேர்ந்தவர்கள் சிரமப்படும் இன்றைய காலகட்டத்தில் தமது முன்னோர் நினைவு நாளில் (பாட்டியின் நினைவு நாளுக்காக) தாமாகவே முன் வந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 பேர் கண் , உடல் உறுப்பு தானங்களை செய்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளனர்.

மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த மறைந்த திரு.ஆறுமுகம் மற்றும் குப்பாயிஅம்மாள் குடும்பத்தைச்  சேர்ந்த வாரிசுகள் மொத்தமாக  உறுப்பு தானமும் கண் தானமும் செய்வதற்கு பதிவு செய்திருக்கிறார்கள்.மறைந்த தாத்தா, பாட்டியின் நினைவாக இன்று அவர்களின் மகன் மற்றும் மகள் வழியைச் சேர்ந்த பேரன்கள் பேத்திகள் மற்றும் கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் என மொத்தம் 42 பேர் கண் தானமும்,35 பேர் உறுப்பு தானமும் செய்வதற்கு மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை தலைமை மருத்துவரை சந்தித்து பதிவு செய்திருக்கிறார்கள். ஒருவர் மறைந்த பிறகும் வாழ உறுப்பு தானமும் கண் தானமும் அவசியம் செய்யவேண்டும். வாழ்வின் உன்னதத்தை எடுத்துரைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com