தமிழகத்திற்கு தேவை 500 மெட்ரிக் டன்; மத்திய அரசு ஒதுக்குவது 280 மெட்ரிக் டன்: மதுரை எம்பி
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திற்கு ஒதுக்கும் ஆக்சிஜன்அளவை உயர்த்த வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை காட்டுத்தீ போல வேகமாக பரவிவருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு, படுக்கைகள் இல்லை என கொரோனா நோயாளிகள் நாளுக்க நாள் அவதியுற்று வருகின்றனர்.
இதனிடையே மதுரையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ச்சியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை பதிவிட்டு வருகிறார். கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கூட, ‘மதுரையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் 10 நாட்களில் நிலைமை கைமீறி விடும்’ என்று எச்சரித்து இருந்தார்.

மதுரையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் 10 நாட்களில் நிலைமை கைமீறி விடும்.
#Madurai #Covid19 கால நெருக்கடியை மிகச்சரியாக கையாண்டு மீண்டது என்ற நிலையை உருவாக்க அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பும் செயல்பாடும் தேவை. அதற்கு மாவட்ட நிர்வாகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். pic.twitter.com/hiF8nP5wsD
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 29, 2021

அவர் எச்சரித்த ஒர வாரத்தில் மதுரை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான புகார்கள் எழ தொடங்கியது.
இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா நோய் பரவல் கரணமாக தமிழகத்திக்கான ஆக்சிஜன் தேவை 500 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
இதன் பின்பும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்த 280 மெட்ரிக் டன் அளவை விட ஒரு டன் கூட உயர்த்தாமல் மறு உத்தரவு பிறப்பித்திருக்கும் ஒன்றிய அரசு, தமிழக மக்களின் உயிரோடு விளையாடுகிறது. ஆகையால் உடனடியாக 500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.