“நவீன சித்த மருத்துவத்துறைக்கு கிடைத்த வெற்றி”- எம்.பி சு.வெங்கடெசன்

“சித்த மருத்துவத்திற்கு கிடைத்த வெற்றி” - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.
சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்Twitter

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் செயல்படும் அரசு சுகாதாரத் திட்டத்தில் (CGHS) உள்நோயாளிகள் அல்லாத பிற சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவம் மற்றும் ஈட்டுதவித்தொகை இதுவரை ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

union minister
union ministerpt desk

இந்த வசதி சித்த மருத்துவத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அமைச்சர் மாண்டவியா கடந்த ஜுலை 24 ஆம் தேதி மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “இனிவரும் காலங்களில், தனியார் சித்த மருத்துவமனைகளிலும் இந்த வாய்ப்பு அரசு பணியாளர்களுக்கு கிடைக்கும்” என கூறியுள்ளார்.

letter
letterpt desk

இதை வரவேற்று, ‘இது நவீன சித்த மருத்துவத் துறைக்கும், தொன்மையான தமிழ் மரபு மருத்துவத்திற்குமான மிகப்பெரிய வெற்றி’ எனக்கூறி, தமது கோரிக்கையை ஏற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com