தேஜஸ் எக்ஸ்பிரஸ்க்கு ‘தமிழ்ச்சங்க ரயில்’ என பெயர் மாற்றுங்கள் - சு.வெங்கடேசன் எம்பி

தேஜஸ் எக்ஸ்பிரஸ்க்கு ‘தமிழ்ச்சங்க ரயில்’ என பெயர் மாற்றுங்கள் - சு.வெங்கடேசன் எம்பி
தேஜஸ் எக்ஸ்பிரஸ்க்கு ‘தமிழ்ச்சங்க ரயில்’ என பெயர் மாற்றுங்கள் - சு.வெங்கடேசன் எம்பி

சென்னை - மதுரை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தமிழ்ச்சங்க ரயில் என பெயர் மாற்ற வேண்டுமென மதுரை தொகுதி எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலானது சென்னை - மதுரை இடையே நாள்தோறும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 13.20 மணிக்கு மதுரைக்கு செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ், மீண்டும் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு கிளம்பி இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

இந்நிலையில், தேஜஸ் எக்ஸ்பிரஸின் பெயரை தமிழ்ச்சங்க ரயில் என மாற்ற வேண்டுமென மதுரை தொகுதி எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தென்னக ரயில்வே மண்டலத்தின் பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் தேனி தொகுதி எம்பி ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட 15 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களுக்கு பொதிகை, வைகை, முத்துநகர் என்ற பெயர்கள் உள்ளன. அந்த வரிசையில் இந்த ரயிலுக்கு தமிழ்ச்சங்க ரயில் என மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com