பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா

பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா
பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா

கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலியால் புகழ்பெற்ற தை தெப்பத் திருவிழா மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இதில், தை மாதம் நடைபெறும் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இத்திருவிழாவிற்கு தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி தெப்பக்குளத்தில் நடப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தை மாத தெப்பத் திருவிழா கொடியேற்றம் கடந்த ஜனவரி 7 ஆம் தேதியன்று விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வருவதால் கோயில்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொங்கல் பண்டிகை நாட்களான ஜனவரி 14 முதல் ஜனவரி 18ம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆண்டுதோறும் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியம்மனும், சொக்கநாதரும் ஊர்வலமாக தெப்பக்குளத்தை சுற்றி வரும் நிலையில், இந்தாண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக் குளத்தில் எளிமையாக அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியம்மனும், சொக்கநாதரும் வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com