அண்ணனின் திருமணதிற்கு ‘பாரம்பரிய’ பரிசளித்த தம்பி: அப்படி என்ன கொடுத்தார் பாருங்க!

தமிழர்களின் பாரம்பரிய கலைகளை காப்பாற்ற, மதுரையில் தன் அண்ணனின் திருமணத்திற்கு நண்பர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு காளை, 2 ஆட்டுக்கிடா மற்றும் 2 சேவல்களை வழங்கியுள்ளார் அவரது தம்பி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுந்தரகுண்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் - கலைவாணி தம்பதியர். இவர்களது மகன் ராஜாராம் என்ற வல்லரசு-க்கும், அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை - ஜெயா தம்பதியினரின் மகள் அருண்மொழி என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

jalikattu bull
jalikattu bullpt desk

அந்த திருமண நிகழ்ச்சியில் மணமகன் வல்லரசின் தம்பி சுப்புராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு மற்றும் அழிந்து வரும் நிலையில் உள்ள ஆட்டுக்கிடா சண்டை, சேவல் உள்ளிட்ட போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு காளை, இரண்டு ஆட்டுக் கிடா, இரண்டு சண்டை சேவல் ஆகியவற்றை வழங்கினார்.

இதையடுத்து மணமகனும் மணமகளும் தங்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட காளையை முத்தமிட்டவாரு உறவினர்களின் முன்னிலையில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

couple
couplept desk

இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com